Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

திருவாரூர், ஜூன் 23: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் நிகழாண்டு நீட் தேர்வு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்வு வினாத்தாள் கசிந்து பல லட்சம் மாணவர்கள் மீண்டும் நாடு முழுவதும் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நீட் தேர்வையே நடத்தத் தெரியாத மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசினர் கலைக்கல்லூரி முன்பு அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு காரணமாக மனம் நொந்து உயிர் நீத்த மாணவ மாணவிகளின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை அமல்படுத்திய மத்திய அரசு கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.