Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா

முத்துப்பேட்டை, செப். 8: முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வங்கநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் தின விழா தலைமையாசிரியர் நல்லாசிரியர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனையடுத்து நான்காம் வகுப்பு மாணவன் யோகேஸ்வரன் ராதாகிருஷ்ணன் முகமூடி அணிந்து மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் கூறிவிட்டு இனிப்புகள் வழங்கினார்.

இதில் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியை சத்துணவு பணியாளர் யமுனா மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியை மகாலெட்சுமி நன்றி கூறினார்.