Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க புதிய குப்பைத்தொட்டி எப்போது வழங்கப்படும்?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி, செப். 7: திருத்துறைப்பூண்டி அருகே சேதமடைந்த குப்பைத்தொட்டிகள் எப்போது வழங்கப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பல்வேறு ஊராட்சிகளிலும் கிராமப்புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டது.

தற்போது பல ஊராட்சிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் குப்பைகளை முறையாக கொட்டுவதற்கு சிரமப்படுவதுடன், ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலையும் ஏற்பட்டது.

அதன்பிறகு குப்பைத்தொட்டிகள் சேதமடைந்துள்ளதால் சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கிராமப்புறங்களில் தூய்மை பணிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சிகளிலும் சேதமடைந்துள்ள குப்பைத்தொட்டிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுப்பு செய்து, புதிய குப்பைத்தொட்டிகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், குப்பைத்தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.