Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

9 பயனாளிகளுக்கு ரூ.10.84 லட்சம் மதிப்பில் செயற்கை அவயங்கள்

திருவாரூர், செப். 8: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் 9 நபர்களுக்கு ரூ.10 மதிப்பீல் நவீன செயற்கை அவயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 367 மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மேகனசந்திரன் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 நபர்களுக்கு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன செயற்கை அவையங்களை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சதீஷ்குமார் (பொது), நம்பிராயர் (நிலம்), கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தரணிகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உஷாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.