Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவாரூர் மாவட்டத்தில் பூட்டிக்கிடக்கும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?.. விவசாயிகள் கடும் அவதி

திருவாரூர், செப். 7: திருவாரூர் மாவட்டம் அதிக அளவில் சாகுபடி பரப்பளவினை கொண்டுள்ள நிலையில் அதன் மூலம் ஆண்டுதோறும் கூடுதலான அளவில் நெல் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 31ம்தேதியுடன் முடிவடைந்த 2025&-26 காரீப் பருவத்தில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 31ம்தேதி வரையில் திமுக ஆட்சிக்காலத்தின் போது மட்டும் விவசாயிகளிடமிருந்து 8 லட்சத்து 51 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம்தேதி முதல் ஆகஸ்ட் 31ம்தேதி வரையில் குறுவை நெல் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 554 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக 17 ஆயிரத்து 844 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 338 கோடி வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில் 2026&27 காரீப் பருவத்திற்காக குவிண்டால் ஒன்றுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு வழக்கமாக ஆண்டுதோறும் கடந்த 1ம்தேதி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் கொள்முதல் பணி நடைபெறும் நிலையில் இதற்காக இயந்திரத்தில் விலை பட்டியல் பதிவது உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 2 நாட்கள் கொள்முதல் நிறுத்தப்பட்டு செப். 1ம்தேதி மீண்டும் புதிய காரீப் பருவத்திற்காக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால் நடப்பாண்டில் த.வெ.க அரசில் ஆகஸ்ட் 27ம்தேதியே கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டு இது வரையில் நேற்றுடன் 11 நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்திருந்து வருகின்றனர்.

மேலும் கடந்த 31ம்தேதி வரையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு சாகுபடியினை மேற்கொண்டும் தற்போது கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததன் காரணமாக நெல் மூட்டைகளுடன் காத்திருப்பது மட்டுமின்றி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாகவும் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கொந்தளித்து வருகின்றனர்.