Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகூர்-தெக்களூர் இடையே ரூ.99 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

திருத்தணி, ஜன.8: திருத்தணி ஒன்றியம், அகூர்-தெக்களூர் இடையில் 2.50 கி.மீ நீளம் கொண்ட ஒன்றிய சாலையில் அகூர், அகூர் காலனி, கோரமங்கலம், நத்தம், தெக்களூர், பொம்மராஜ்புரம், இஸ்லாம் நகர், சூர்யநகரம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மழை காலங்களில் திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில், தெக்களூர் பகுதியில் நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அகூர் சாலை வழியாக வாகன ஓட்டிகள் ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியதால், அச்சாலையில் சென்று வர முடியாத நிலையில் விவசாயிகள், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 2.50 கி.மீ தூரத்திற்கு சாலை புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலையை புதுப்பிக்கும் வகையில், சாலையில் ஜல்லி கற்கள் பரப்பி சாலை அமைக்கும் பணிகள் ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 4 மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை அமைக்க நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.