பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
திருவள்ளூர், ஆக.7: பட்டாபிராம் இந்து கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் உள்ள டிஆர்பிசிசி இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு வகையான வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர். முகாமிற்கு, குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பட்டய படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது, கல்வி தகுதி முதலான உரிய ஆவணங்களுடன் தங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வேலை வாய்ப்பினை பெற்றிடும் வகையில், இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.