Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் தாய் சேய் நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் த.பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் அனைத்து சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் பரிசோதனை செய்து கொள்ள தனியார் மருத்துவர்களை அணுகும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையம் அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 9384814050, 9384814049, 9384814048, 9384814047, 9384814046 ஆகிய அலைபேசி எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க முடியும். இதன் முலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகித்தினை படிப்படியாக குறைக்க முடியும். தனியார் மருத்துவர்களை அணுகும்போது அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தினால் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க முடியும் என்றார்.

பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்து சிறப்பாக பணியாற்றிய அரசு மற்றும் தனியார் பல் மருத்துவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கர்ப்ப காலங்களில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள் தொடர்பான ‘‘100 மகப்பேறு இழப்புகள் 100 பாடங்கள்’’ என்ற புத்தகத்தினை கலெக்டர் வெளியிட, மருத்துவ அலுவலர்கள் பெற்றுகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர்கள் திருவள்ளூர் பிரியாராஜ், பூந்தமல்லி பிரபாகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, ஆவடி மாநகராட்சி நகர்நல அலுவலர் ராஜேந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குனர் நிர்மல்சன், சுகாதாரத் துறை இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், குடும்ப நல துணை இயக்குனர் சேகர், திருவள்ளூர் ஜனனி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.புவனேஷ்வரி கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.