Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்டிஇ.ஆதிசேஷன், மாவட்ட நிர்வாகிகள் உதயமலர் பாண்டியன், ஜெயபாரதி, மிதுன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் ராஜேந்திரன், ச.மகாலிங்கம், ரமேஷ், அரிகிருஷ்ணன், கிறிஸ்டி, கிருஷ்ணன், சண்முகம், ராஜேந்திரன், பழனி, சந்திரன், பாபு, பொதுக்குழு உறுப்பினர் சிட்டி பாபு, ஆதாம், ராஜேஸ்வரி ரவிந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் களம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், ம.கிரண்குமார், சரஸ்வதி சந்திரசேகர், வி.எஸ்.நேதாஜி, கோவிந்தம்மாள், மோதிலால், டி.கே.பாபு, சுகுமார், ஆணழகன் டி.ஆர்.திலீபன் மற்றும் கிளைச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ஆவடி : திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆவடி பேருந்து நிலையம் அருகே தமிழக ஆளுநரை கண்டித்தும், அவரைக் காப்பாற்றும் அதிமுக-பாஜ கள்ளக் கூட்டணியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயக்குமார், மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சீனிவாசன், ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், குமார், மகாதேவன், மாநகர பொறுப்பாளர் சன் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் தொழுவூர் பா.நரேஷ்குமார், பகுதிச் செயலாளர்கள் நாராயணன், பொன்.விஜயன், பேபிசேகர், ஒன்றிய நகர பகுதிச் செயலாளர்கள் தேசிங்கு, ஜெயசீலன், புஜ்ஜி ராமகிருஷ்ணன், என்.இ.கே.மூர்த்தி, ப.ச.கமலேஷ், பிரேம் ஆனந்த், திருமலை, தங்கம் முரளி, முனுசாமி, தி.வை.ரவி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செந்தாமரை, கருணாநிதி, உமாமகேஸ்வரன், அக்னி ராஜேஷ், பிரியாகுமார்,

மாணவரணி துணை அமைப்பாளர்கள் புருஷோத்தமன், விக்டர் மோகன், சந்தோஷ் ராஜ், சரத்குமார், மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் விஜயலட்சுமி, சுரேஷ்கிருஷ்ணன், சிவா, அணிகளின் நிர்வாகிகள் சங்கீதா, பவுல், தமிழ்ச்செல்வி, வினோத், நாகூர்கணி, பொறியாளர் மோகன், ரவி, ஜாக்கப், சௌந்தரராஜன், இளையான், பிரவீன்குமார், விமல், குமரேசன், தணிகாசலம், சண்முகம், குமரேசன், ஷாஜகான், பார்த்திபன், நிஜலிங்கம், ஆதிகேசவன், யோகா, திராவிட தேவன், கௌரி கஜேந்திரன், கஜலட்சுமி, என்.லட்சுமி, உதயா, பேபிஸ்ரீ உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் துர்கா பிரசாந்த், தியாகராஜன், ராஜேஷ் குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

பொன்னேரி : கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொன்னேரி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் டிஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் அவைத்தலைவர் பகலவன், பொருளாளர் ரமேஷ், சி.எச்.சேகர்,பாஸ்கர் சுந்தரம், உமா மகேஸ்வரி, ஸ்டாலின், தமிழரசன், ஒன்றியச் செயலாளர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், வல்லூர் ரமேஷ் ராஜ், வைழுதிகை செல்வசேகரன், மூர்த்தி, குணசேகரன், அன்புவாணன், ஆனந்தகுமார், மணிபாலன், சக்திவேல், சந்திரசேகர், லோகேஷ், பரிமளம் விஸ்வநாதன், கதிரவன், பொன்னேரி ரவிக்குமார், மீஞ்சூர் தமிழ் உதயன், அறிவழகன், ஆரணி முத்து, ருக்குமணி மோகன்ராஜ், அலெக்சாண்டர், தீபன், ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானர் கலந்து கொண்டனர்.