Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டீக்கடைக்காரரை தாக்கிய வாலிபர்கள் 2 பேர் கைது: திருத்தணியில் பரபரப்பு

திருத்தணி, ஜூன் 2: திருத்தணியில் தின்பண்டங்கள் வாங்கியதற்கு, காசு கேட்ட டீக்கடைக்காரரை மிரட்டி, தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட மேல் திருத்தணியில் பொதட்டூர்பேட்டை சந்திப்பு சாலை அருகே மகேஷ் என்பவர் டீக்கடை மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சென்ற குமாரகுப்பம் பகுதியை சேர்ந்த விக்கி (எ) பிரகாஷ்(24), அமிர்தாபுரம் பகுதியை சேர்ந்த தருண்(20) ஆகியோர் வந்தனர். அப்போது, கடையில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டனர். மேலும் காசு கேட்ட, என டீக்கடைக்காரரை மிரட்டி தாக்கியுள்ளனர்.

மேலும், அங்கிருந்து முருகூர் பேருந்து நிறுத்தம் சென்றனர். அங்கு தனியார் கம்பெனியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பாலாஜி என்பவரை அவதூறாக பேசி அடித்து மிரட்டி உள்ளனர். மேற்படி இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் விக்கி, தருண் ஆகிய வாலிபர்கள் 2 பேரை நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.