திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா வள்ளி-முருகப்பெருமான் திருக்கல்யாணம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement
மாசிப் பெருவிழாவின் 9ம் நாளான நேற்று அதிகாலை சிறப்பு பெற்ற வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. வள்ளி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் குறவர் சமுதாய மக்கள் திருமணத்திற்கு மேளதாளங்கள் முழங்க பட்டு வஸ்திரங்கள், பழங்கள் மலர்மாலைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். திருமண அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி - முருகப்பெருமானுக்கு, கோயில் அர்ச்சகர்கள் பாரம்பரிய முறைப்படி ஹோம பூஜைகள் செய்து வள்ளி திருமணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, ``அரோகரா... அரோகரா...’’ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பெண்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. வள்ளி திருக்கல்யாண ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
Advertisement