சின்னமனூர், அக். 30: சின்னமனூர் அருகே வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த டூவீலரை, இரவில் திருடிச்சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சூர்யா (24) பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கான தேர்வுகள் எழுதுவதற்காக படித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது டூவீலரை சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். மறுநாள் காலை எழுந்தபோது, அவரது டூவீலர் திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து பல்வேறுஇடங்களில் தேடிப்பார்த்தும்வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நடந்த சம்பவம் குறித்து சூர்யா, சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, டூவீலர் திருடியவரை தேடி வருகின்றனர்.


