தேனி, அக். 30: உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2024ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, 52 வயதுடைய கந்தன் என்ற தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பினர் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கந்தனை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தேனி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜரானார்.விசாரணை முடிவில் கந்தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதையடுத்து அவருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


