கூடலூர், அக். 30: பள்ளி மாணவ, மாணவிகளை பொறுப்புள்ள உயர்ந்த குடிமக்களாக மாற்றுவது அரசு மற்றும் அனைவரின் கடமை. இன்றைய இளைய சமூகத்தின் சில செயல்பாடுகள் சிறிது வருத்தமளிப்பதாகவே உள்ளது. பாலியல் வன்முறை குறித்த சட்டம், போதை பொருள் சட்டம் போன்றவற்றை பள்ளி பாடங்களின் ஒரு பகுதியாக சேர்க்க பரிசீலித்தால், மாணவர்கள் இளம் வயதிலேயே விழிப்புணர்வு பெற வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, மாணவர்களின் நலன்கருதி தமிழக கல்வித்துறையும், தமிழக அரசும் பள்ளி பாடத்திட்டத்தில் சட்டம் குறித்த பாடப்பிரிவுகளை சேர்த்து மாணவர்களுக்கு வழிகாட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.


