Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உள்ளாட்சி தினத்தையொட்டி நவ.1ல் கிராம சபைக்கூட்டம்

தேனி, அக். 29: உள்ளாட்சி தினமான நவ.1 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: உள்ளாட்சிகள் தினமான நவ.1 அன்று காலை 11 மணியளவில் தேனி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. உள்ளாட்சிகள் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றதாகும்.

இவற்றுடன் தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல், பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைத்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.