Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியகுளத்தில் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி

தேனி, மே 28: பெரியகுளத்தில் நேற்று மதியம் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாகக் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென பெரியகுளம் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளான தாமரைக்குளம், லட்சுமிபுரம்,

டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, சருத்துப்பட்டி, எ.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாகக் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்ததால், பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் சூழல் இருந்தது. நேற்று பெய்த திடீர் கனமழையினால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.