Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிதி நிறுவன அதிபரை தாக்கிய வாலிபர் கைது

வடமதுரை, பிப். 28: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புது கொம்பேறிபட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (41). நிதி நிறுவன அதிபர். இவர் தற்போது தூத்துக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதற்கிடையே ஜெயராஜ், ஜங்கால்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (46) என்பவரிடம் தான் கொம்பேறிபட்டி, பாகாநத்தம், வடமதுரை ஆகிய பகுதிகளில் பார்த்து வந்த நிதி நிறுவனத்தை ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

ஆனால் சிவக்குமார் பணத்தை பெற்று கொண்டு, வரவு செலவு கணக்குகளை சரியாக காண்பிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே இருந்த சிவக்குமாரிடம் வரவு செலவு கணக்குகளை ஜெயராஜ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அவரை தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதுகுறித்து ஜெயராஜ் வடமதுரை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார்.