Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கால்பந்தாட்ட போட்டி

உத்தமபாளையம், அக். 23: உத்தமபாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட மகளிர் அணி சார்பில், எற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு மாவட்ட மகளிரணி தலைவர் மெகராஜ் பேகம் தலைமை தாங்கி ஒருங்கிணைத்தார். நகர தலைவர் முகமது இஸ்மாயில், கிராஅத் ஓதி போட்டியை தொடங்கி வைத்தார்.

மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் சர்புதீன் தலைமை தாங்கினர் விளையாட்டு போட்டிகளை அல்-அஜ்கர் மெட்ரிக் பள்ளி தாளாளர் நைனார் முஹம்மது தொடங்கி வைத்தார். இதில், உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. நவாஸ்கான் மாவட்ட இளைஞரணி செயலாளர், நன்றி கூறினார்.