தேனி, அக். 23: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் காமேஸ்வரன் தலைமை வகித்தார். தேனி வட்ட கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத் குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
போராட்டத்தில் அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் விருப்பு உரிமை பெற்று திருத்திய காப்பீட்டு திட்ட அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் மாநில பொது செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தின் நிறைவாக மாவட்ட இணைச்செயலாளர் சர்ஜிலாபர்வின் நன்றி கூறினார்.


