Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சாலை விபத்தில் மெக்கானிக் பலி

நிலக்கோட்டை, ஜன.23: கொடைரோட்டை அடுத்த அழகம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சின்னமுத்து(20) டூவீலர் மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு, பணி முடித்துவிட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சக்கையாநாயக்கனூரிலிருந்து அழகம்பட்டி செல்லும் சாலையில் சாலையோரத்திலிருந்த மின்கம்பத்தில் டூவீலர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.