தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெத்தைகளை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

ஆண்டிபட்டி, ஏப்.20: வெயில் காலங்களில் மெத்தையில் படுக்க வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: கோடை காலங்களில் உப்பு, புளிப்பு, கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

Advertisement

இரவில் மெத்தையில் படுக்காமல் தரையில் பெட்ஷீட் விரித்து படுக்க வேண்டும். காலை உணவாக கம்மங்கூழ், ராகி போன்றவற்றை உண்ண வேண்டும். வாசலில் மஞ்சள் தெளித்து வைத்தால் சூட்டை குறைக்கும். சீரக தண்ணீர் அருந்த வேண்டும். தேங்காய் சட்னி, பால், தயிர், வெண்ணை போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். கொத்தமல்லி தழை சட்னி, புதினா மற்றும் இஞ்சி சட்டினிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

மதியம் வேளைகளில் சாதத்தை குறைந்த அளவும், காய்கறிகளை அதிகளவும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிழங்கு வகை மற்றும் மாவு வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்சத்து மற்றும் நீர் சத்து அதிகமுள்ள சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ளலாம். நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா போன்ற பழ வகைகளை உண்ணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News