தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது

நத்தம், ஏப்.20: நத்தம் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை ெசய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், எஸ்ஐக்கள் மலைச்சாமி, கார்த்திகேயன் மற்றும் போலீசார் நத்தம் சுற்று வட்டார கிராம பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

அப்போது நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டி பஸ் நிறுத்தப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (46) என்பவர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பண்ணியாமலை பகுதியில் தான் நடத்தும் பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வம் (56), செந்துறை மங்களப்பட்டி பிரிவு பகுதியில் பதுக்கல் மது விற்பனையில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் (39) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

Advertisement