போடி, செப். 18: போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சியிலுள்ள பொட்டல் களம், வினோபாஜி காலனியை சேர்ந்தவர் சண்முகம்(61).கூலி தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவனமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனிறி நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


