Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சிறுவன் மாயம் போலீசார் விசாரணை

தேனி, செப். 18: பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதியில் குடியிருப்பவர் பேச்சிமுத்து மகன் மாரிமுத்து(45). லாரி ஓட்டுனரான மாரிமுத்துவின் மனைவி இறந்து விட்டார் இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்றாவது மகனான முத்துகிருஷ்ணன் (13) கடந்த 15ம் தேதி திருச்சியில் உள்ள அவனது நண்பர்களை பார்ப்பதாக மாரிமுத்துவிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீசில் மாரிமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.