Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சாலைகளில் எச்சரிக்கை பலகை அவசியம்

தேவாரம், ஜூலை 18: தேவாரம் பகுதி சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் இடங்களில், கூடுதலாக எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம், போடி, தேனி, ஆகிய ஊர்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இச்சாலை வழியே தினந்தோறும் அதிகமான அளவில் கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், செல்கின்றன. இச்சாலை வழியே செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் விபத்துக்கள் உண்டாகிறது. இதனைத் தடுக்க சாலையோரங்களில் கூடுதல் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.