Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அழைத்து வந்தபோது சிறைக் கைதி தப்பியோட்டம்

தேனி, அக். 17: தேனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிட்டு மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றபோது கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் காஞ்சிவந்தமணி (23). இவர் மீது கம்பம் வடக்கு காவல்நிலைய போலீசார் பதிந்த வழக்கில் சிறை தண்டனை பெற்று, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஆயுதப்படை போலீசார் மற்றும் ஒரு பெண் காவலர் நேற்று முன் தினம் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின், மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்ல தேனி புதிய பஸ்நிலையம் வந்தனர். அங்கு திடீரென போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு காஞ்சிவந்தமணி தப்பி ஓடினார். போலீசார் அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிந்து, தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர்.