போடி, அக். 16: போடி புறநகர் காவல் நிலைய எஸ்.ஐ ராஜா மற்றும் போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேச்சியம்மன் கோயில் அருகே ஒருவர் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை ெசய்வது தெரியவந்தது.
விசாரணையில், அவர் அப்பகுதியில் உள்ள விசுவாசபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஈஸ்வரன் (30) என்பது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு ெசய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


