Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புகையிலை விற்பனை; கடைக்கு சீல்

போடி, அக். 16:போடி நகர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக போலீசாகும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடைகளில், புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குள்ள பல்வேறு கடைகளில் போடி நகர் போலீசார் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இதில் ஒரு கடையில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் ெசய்ததுடன்,கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு ெசய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்