Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவுமாரியம்மன் கோயிலில் முடிகாணிக்கை செலுத்த ரூ.300 கட்டணம் வசூல்: பக்தர்கள் கவலை

தேனி, மே 16: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்த பக்தர்கள், தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக நன்றி கடன் செலுத்தும் வகையில் அங்கபிரட்சனம், அக்னிச்சட்டிஎடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல், ஆயிரம்கண்பானை எடுத்தல், முடிகாணிக்கை செலுத்துதல், அலகுகுத்துதல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவது வழக்கம்.

இதில் முடிகாணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் எடுத்தவர்கள் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் இருந்து நபர் ஒருவருக்கு ரூ.300 முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து பக்தர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கூடுதல் கட்டணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.