Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கட்சி பேனரை கிழித்தவர் கைது

போடி, மே 16: போடி அருகே மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னராசு (55). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர். அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மகன் கோபி என்பவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பதாகையை கிழித்து, உடைத்து சேதப்படுத்தினார்.

இதனை சின்னராசு தட்டிக்கேட்டபோது, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சின்னராசு அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து கோபியை கைது செய்தனர்.