Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை ஐடிஐ தொழில்நுட்ப தேர்வை 440 பேர் எழுதுகின்றனர்

தேனி, நவ. 15: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை நடைபெற உள்ள ஐடிஐ தொழில்நுட்ப தேர்வினை தேனியில் 440 பேர் எழுத உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில் நுட்பத் தேர்வான ஐடிஐ தொழிற்பயிற்சி இரண்டாம் நிலை தேர்வுகள் நாளை (நவ.16ம் தேதி) காலை மற்றும் மதியம் நடைபெற உள்ளது.இரண்டாம் நிலை கணிணி வழித் தேர்வினை தேனி மாவட்டத்தில் நாளை காலையும், மதியமும் ஆக இரண்டு நேரங்களில் தேர்வு நடக்க உள்ளது.

காலையில் நடைபெறும் தேர்வினை 220 பேரும், மதியம் நடைபெறும் தேர்வினை 220 பேரும் எழுத உள்ளனர். தேர்வர்கள் தேர்வாணையத்தின் அறிவுரையின்படி, தேர்வு நடைபெறும் நாளான நாளை (16-ம் தேதி) காலை 8 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும். காலை 8 மணிக்கு தேர்வு மையங்களில் நுழைவு வாயில்கள் மூடப்படும். காலை 8 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இத்தேர்வினை எழுதவுள்ள தேர்வர்கள் தேர்வு தொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை எண் 94877 71077 என்றதொலைப்பேசி என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் தங்களது செல்போன்கள், மற்றும் பிற மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்