Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வருசநாட்டில் மந்தைம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா

வருசநாடு, அக். 15: வருசநாடு கிராத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ேநர்த்திக்கடன் செலுத்தினர். வருசநாடு கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயிலில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்டாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி நடப்பாண்டிற்கானள திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள், காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்துகொண்டு, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் பலரும் காலையில் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.