Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்தமபாளையம் பகுதியில் தனியார் பார்களை கண்காணிக்க வலியுறுத்தல்

உத்தமபாளையம், ஜூலை 15: தேனி மாவட்டத்தில் தேவாரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கம்பம், கூடலுார், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாரால் பார் நடத்தப்படுகிறது. இவை முழுக்க அரசின் விதிகளை கடைப்பிடித்துதான் நடத்தப்பட வேண்டும். குறிப்பாக மதுபானம் விற்பனை செய்யும்போது அரசு நிர்ணயம் செய்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் தான் திறக்கப்பட வேண்டும்.

காலை 11 மணிக்கு திறந்து, இரவு 11 மணிக்கு அடைக்கப்பட வேண்டும். ஆனால் தற்பொழுது உள்ள பார்கள் அதிகாலையிலேயே திறந்து விற்பனை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தில் அடைக்காமல் அதிகாலை வரை திறந்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே தனியார் பார்களை கண்காணித்து, விதி மீறி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.