தேனி, அக். 14: தேனி பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருந்ததார். அப்போது யுவராஜா(20) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டித்தபோது வாலிபருக்கு ஆதரவாக அவரது தாயார் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீசார், யுவராஜா மற்றும் அவரது தாயார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பில் வழக்கறிஞர் ரக்சிதா ஆஜரானார். விசாரணை முடிவில் தாயார் விடுவிக்கப்பட்ட நிலையில், யுவராஜாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார்.


