தேனி, அக். 14: கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடனுதவி முகாம் நாளை மறுதினம் (அக்.16) தேனி அருகே கொடுவிலார்பட்டியில் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் கல்லூரிகள், மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். முகாமில் அனைத்து வங்கிகள் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைத்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
+
Advertisement


