மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
தேனி, நவ. 12: தேனியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேனியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
Advertisement
இதில், பள்ளி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பது பற்றி பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர். பேரணி தேனி பங்களாமேட்டில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை வரை வந்து மீண்டும் பங்களாமேட்டில் முடிவுற்றது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Advertisement