Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பதுக்கல் மது விற்றவர் சிக்கினார்

போடி, செப். 11: போடி நகர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ குமரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்பநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவில், அதே பகுதியைச் சேர்ந்த காசிமாயன் (58) என்பவர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து, இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு பலருக்கும் விற்பனை ெசய்வது தெரியவந்தது.

இதையடுத்து அவரை சுற்றிவளைத்த போலீசார், அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காசிமாயனை கைது செய்தனர். இவர் மீது இந்த காவல்நிலையத்தில் ஏற்கனவே 9 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.