Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போடி அருகே தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

போடி, செப்.11: போடி அருகே கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் உத்தமராசா(33). கூலி தொழிலாளி. போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் கட்டிட காண்ட்ராக்டர் ஆனந்த். இவரிடம் உத்தமராசா கட்டிடங்களுக்கு பெயிண்டிங் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 7ம் தேதி உத்தரமராசா செல்போன் மூலம் காண்ட்ராக்டர் ஆனந்திடம் தொடர்புகொண்டு, பெயிண்ட், கோக்காலிக்கு பணம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஆனந்தின் மகன்கள் தீனா(30), யுவராஜ் (25) உட்பட 4 பேர் சேர்ந்து, எப்படி நீ பணம் கேட்கலாம் எனக்கேட்டு உத்தமராசாவை அவதூறாக பேசியதுடன், சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த உத்தமராசா, போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், தீனா உட்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.