Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தாக்குதலில் இளைஞர் படுகாயம்

தேவதானப்பட்டி, செப். 11: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் நல்லமணிநகரைச் சேர்ந்தவர் முத்து(28). இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளப்புரம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் மண்வெட்டி, கம்புகளால் முத்துவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த முத்து தேனி அரசு மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.