Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனி என்.எஸ்.கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி, ஜூன் 11: தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இதில் கல்லூரி செயலாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் வன்னியராஜன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் உள்தர உத்தரவாத குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை வரவேற்றார்.

இதில் மதுரை தெரசா மகளிர் பல்கலைக்கழக பேராசிரியர் விமலா கலந்து கொண்டு, தேசிய கடன் கட்டமைப்பு மற்றும் தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசிய கடன் கட்டமைப்பின் முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சி முகாமில் தேனி சரசுவதி கலை, அறிவியல் கல்லுரி துணை முதல்வர் சுசீலா சங்கர், வேதியியல் துறைத் தலைவர் தேவிமீனாட்சி, ஆங்கிலத் துறை பேராசிரியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டு ஓபிஇ அடிப்படையிலான பாடத்திட்டங்களை தயாரித்தல், மாதிரி வினாத்தாள்களை உருவாக்குதல் குறித்தும் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 117 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.