Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆண் சடலம் மீட்பு

சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை குச்சனூர் சாலையில் உள்ள கோழிப்பண்ணை அருகே பாலத்திற்கு கீழ் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததைக் கண்டு மார்க்கையன்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி வனிதாவிற்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அவர், சின்னமனூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, சடலமாக கிடந்த நபர் குறித்தும், உயிரிழப்புக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.