Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கலெக்டர் திடீர் மாற்றம்

தேனி, அக். 10: தேனி மாவட்ட கலெக்டராக இருந்த வைத்தியநாதன் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, புதிய தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திநாதன் கடந்த மே 29, 2026 அன்று தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு கடந்த 31.05.2026 அன்று தேனியில் கலெக்டராக பொறுப்பேற்றார். நான்கு மாதங்கள் தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய நிலையில் திடீரென வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டது அரசு அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.