தேனி, அக். 10: தேனியில், மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு எம்பிளாயிஸ் பெடரேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மின்வாரிய ஊழியர்களின் வேலை வாய்ப்பும், பொதுமக்களுக்கான கட்டணச் சலுகைகளும் கேள்விக்குறியாக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


