தேவதானப்பட்டி, செப். 10: தேவதானப்பட்டி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன்(61). இவரது விளைநிலத்தினை அருகில் வசிப்பவர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் விளைநிலத்திற்குள் நுழைந்த வடக்கு காலனியைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் அதனை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை நாகராஜன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவபெருமாள் கற்களால் நாகராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் சிவபெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


