குஜிலியம்பாறை, செப். 10: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜலெட்சுமி (54). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் இருந்தபோது டூவீலரில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். இவர்களில் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டி வந்த நபர் சாலையில் நின்றுள்ளார்.
துணியால் முகத்தை மறைத்திருந்த மற்றொருவர் கடைக்கு வந்து தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். பின்னர் திடீரென ராஜலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துள்ளார். அப்போது ராஜலெட்சுமி போராடியதில் செயின் அறுந்தது. இதில் 3 பவுன் செயினுடன் தப்பிய இருவரையும், குஜிலியம்பாறை போலீசார் தேடி வருகின்றனர்.


