போடி, அக்.9: போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுட்டார். அப்போது, அங்கு பெட்டிக்கடை நடத்தி வரும் போடி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த அய்யப்பன்(56) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட போதை தரும் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்த கடையில் போலீசார் பரிசோதனை செய்தததில், நான்கு பாக்கெட்டுகளில் புகையிலை பொருள் இருந்ததை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


