Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மண் கடத்திய லாரி பறிமுதல்

போடி, அக். 9: போடி வருவாய் ஆய்வாளர் கருப்பனராஜா(42). இவர் நேற்று முன் தினம் உத்தமபாளையம் ஆர்.டி.ஓவுடன் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது, போடி திருமலாபுரம் - மேலசொக்கநாதபுரம் சாலை பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்த லாரியில் அரசின் அனுமதியின்றி கனிம வளமான செவ்வல் மண் 3 யூனிட் வரை கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை மண்ணுடன் பறிமுதல் செய்து போடி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆர்ஐ கருப்பனராஜா அளித்த புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ விஜய் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.