Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கங்காதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேவதானப்பட்டி, செப். 9: தேவதானப்பட்டியில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் கங்காதீஸ்வரருக்கு மஞ்சள்பொடி, மாம்பொடி, திருமஞ்சன திரவியம், பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை, நந்தி, கங்காதீஸ்வரர், கங்காபரமேஸ்வரி, தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களால் திருமுறை திருப்பதிகங்கள் பாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.