கம்பம், செப். 9: மாவட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: தேனி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5.1.2025 உடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, கிராம ஊராட்சிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மின் விளக்கு வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக சம்பந்தப்பட்ட தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமோ அல்லது ஊராட்சி மணி என்ற இலவச தொலைபேசி அழைப்பில் 155340 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


