தேனி, செப். 9:தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தேனி மாவட்ட கிளை சார்பில், தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவமணி, துணை தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர் சங்க நிர்வாகி செல்வக்கனி துவக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய காப்பீடு திட்ட விதிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


